குழந்தைகளை வைத்து அக்கப்போர் செய்த ஜீ தமிழ் – மோடியை சீண்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

0

ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஜீ தமிழ் சேனல்லில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து கிண்டலக்கும் வகையில் பேசியதால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க கட்சியினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சி டிசம்பர் 26ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மிர்ச்சி செந்தில், பிக்பாஸ் சம்யுக்தா, நடிகை சினேகா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியின் எபிசோடு தற்போது ஒரு பிரச்சனையை கிளப்பியுள்ளது.

அதாவது அந்நிகழ்ச்சியில் வடிவேலுவின் புலிகேசி கெட்-அப்பில் சிறுவர்கள் ஒரு நாடகத்தை நடத்தினர். அதில் சிறுவர்கள் நாடு நாடாக சுற்றுப்பயணம் செல்வது போல பிரதமர் மோடியை கிண்டலடித்து நாடகத்தை நடத்தினர். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சேனல் நிர்வாகம் மற்றும் நடுவர்கள் அனைவரும் பா.ஜ.க கட்சியினரிடம் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அந்த ஸ்கிரிப்டை தயார் செய்த அமுதவாணனை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பா.ஜ.க கட்சியினர் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here