பிரபல எம்ஜிஆர் பட இயக்குனர் திடீர் மறைவு – இருளில் மூழ்கிய இந்திய திரையுலகம்!!

0
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!

மலையாள திரையுலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்த கே. எஸ். சேதுமாதவன், வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இயக்குநர் மறைவு :

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் மிகப்பெரிய ஆளுமைகளாக வலம் வந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்டோர். இவர்களது படம் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் கடந்த 1975ம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான “நாளை நமதே” என்ற படத்தை இயக்கி தனக்கான தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன். இதே போல், பால்மணம், மறுபக்கம், நிஜங்கள், கல்யாண ஊர்வலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம்,இந்தி,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களை இயக்கி இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 1931ம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்த இவர்,பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில், தனது 90வது வயதில் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்திய அளவிலான திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here