“வாரணம் ஆயிரம்” பட பிரபலம் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!

0
"வாரணம் ஆயிரம்" பட பிரபலம் திடீர் மரணம்..,சோகத்தில் திரையுலகம்!!

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் இரண்டு பாடலுக்கு கிட்டார் வாசித்த பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ்:

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியம் வாய்ந்த திரைப்படம் என்றால் அது வாரணம் ஆயிரம் தான். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிம்ரன், திவ்யா, சமீரா ரெட்டி போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்பாவுக்கு மகனுக்கும் இடைப்பட்ட பாச போராட்டத்தை எடுத்து காட்டிய இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக அடியே கொல்லுதே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை போன்ற பாடல்கள் தற்போது வரை ரசிகர்களின் ரிங்டோனாக வைத்துள்ளனர்.

நாடா?? இல்ல IPL போட்டியா?? உங்களுக்கு எது முக்கியம்.., BCCI எச்சரித்த ரவி சாஸ்திரி!!!

இந்த நிலையில் அந்த இரண்டு பாடலுக்கு கிட்டார் வாசித்த பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here