நாடா?? இல்ல IPL போட்டியா?? உங்களுக்கு எது முக்கியம்.., BCCI எச்சரித்த ரவி சாஸ்திரி!!!

0
நாடா?? இல்ல IPL போட்டியா?? உங்களுக்கு எது முக்கியம்.., BCCI எச்சரித்த ரவி சாஸ்திரி!!!
நாடா?? இல்ல IPL போட்டியா?? உங்களுக்கு எது முக்கியம்.., BCCI எச்சரித்த ரவி சாஸ்திரி!!!

இந்திய வீரர்கள் அனைவரும் IPL போட்டிகளில் விளையாடுவது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.

ரவி சாஸ்திரி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்றது. இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் அனைவரும் அடுத்ததாக IPL தொடருக்காக பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் வீரர்களுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அதாவது தற்போது இந்திய வீரர்கள் அனைவருக்கும் தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருவதால் இந்திய வீரர்கள் மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு IPL போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

Accenture ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.., 19,000 பேரை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு!!

IPL போட்டி முடிந்தவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. இப்படி தொடர்ந்து போட்டிகள் நடைபெறுவதால் இந்திய வீரர்களின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. இதனால் இந்திய நாட்டினை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால் IPL போட்டிகளில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வழிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு வாய்ப்பில்லை என்றாலும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here