முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நோ சொன்ன டாப் 5 நடிகைகள் – யார் யாருன்னு பாருங்க!!

0

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகைகள் திணறி வரும் வேளையில் தனக்கு வந்த நல்ல வாய்ப்பை தவற விட்ட நடிகைகள் நிறைய பேர் உள்ளனர். அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் கமிட் ஆகி நடிக்க முடியாமல் போன நடிகைகள் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாய்ப்பை தவற விட்ட நடிகைகள்:

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை என்றே கூறலாம். ஆனால் இதில் ஒரு சில நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டும் வருகின்றனர். முதலில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகை திரிஷா நடித்த கதாபாத்திரத்தை நடிகை சமந்தா நடிக்க வேண்டியதாம். ஆனால் சில காரணங்களால் சமந்தா நடிக்க முடியாமல் போய் விட்டதாம். அதே போல் பாபநாசம் மலையாள படத்தில் முதலில் நடிகை நதியாவை மீனா கதாபத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று படக்குழு முடிவு செய்ததாம். ஆனால் நதியாவோ கமல் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம்.

அடுத்ததாக நடிகர் விஜய் நடித்து வெளிவந்த காவலன் படத்தில் அசின் தோழியாக நடிகை பாவனாவை நடிக்க வைக்க திட்டமிட்டது படக்குழு. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக பாவனா நடிக்கவில்லையாம்.அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் படத்தில் முதலில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க வேண்டியதாம்.மேலும் வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடித்த 23 ஆம் புலிகேசியில் ஸ்ரேயா ஒப்பந்தமாகி பின்பு விலகி விட்டாராம். இவ்வாறு தமிழ் சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு கிடைத்த முத்தான பட வாய்ப்புகளை தவற விட்டு தற்போது புலம்பிக்கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here