பன்றி இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி வெற்றி – மருத்துவ உலகில் மாபெரும்  சாதனை!!

0

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

 மனிதனுக்கு பன்றி இதயம் :

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் என்பவருக்கு தீவிர இதய பாதிப்பு ஏற்பட்டது. மாற்று இதயம் இல்லாமல், அவரால் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். தான் உயிர் வாழ்வதற்கு, மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் கடைசி வாய்ப்பு இது என்பதால் பென்னட்டும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு பன்றியின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

ஆனால், இந்த இதயத்தை வைத்து அவர் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  கடந்த அக்டோபர் 2021 ம் ஆண்டு நியூயார்க்கில் பன்றியின் சிறுநீரகம், மூளை செயலிழந்த மனிதனுக்கு பொருத்தப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை  செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here