தனது நீண்ட நாள் வேண்டுதலை செய்து முடித்த நடிகர் விஷால் – அதுவும் இவ்வளவு கஷ்டப்பட்டா!!

0

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் தனது நீண்ட நாள் கனவை நடிகர் விஷால் தற்போது நிறைவேற்றியுள்ளார்.

வேண்டுதலை முடித்த விஷால் :

வெள்ளித்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஷால். சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர் சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமாரின் உதவியால் படித்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தார். இதுபோக இவர் நடிப்பில் உருவான எனிமி படம் நாளை திரைக்கு வரவுள்ளது.

இவர் போக இந்த படத்தில், நடிகர் ஆர்யா, மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் புரோமோஷன் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், தற்போது நடிகர் விஷால் திருப்பதிக்கு சென்று உள்ளார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் தனது நீண்ட நாள் கனவை தற்போது நிறைவேற்றியுள்ளார். கடந்த ஆண்டு இவர் சென்றிருக்க வேண்டிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்போது இவர் ஏழுமலையானை பார்க்க கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்றுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here