பேஸ்புக்கில் வரப்போகும் 7வது எமோஜி – இதயத்தை தவழும் செண்டிமெண்ட் முகம்..!

0

நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் எமோஜிகள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவற்றைக் கூட எமோஜி மூலம் எளிதாக கூறி விட முடியும். அத்தகைய உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்த தான் பேஸ்புக் நிறுவனம் எமோஜிகளை தனது செயலியில் அறிமுகம் செய்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

7வது எமோஜி:

பேஸ்புக்கில் முன்பு கமெண்ட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. அதற்கு பின்பே லைக், லவ், ஹாஹா, அழுகை, ஆங்கிரி போன்ற எமோஜிகள் சேர்க்கப்பட்டன. இது அதன் பயனர்களிடம் ஆரம்பத்தில் விமர்சனத்திற்கு உட்பட்டாலும் பின்பு பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் புதிதாக 7வது எமோஜி சேர்க்கப்பட உள்ளது. இது இதயத்தை தழுவி ஆறுதல் சொல்வது போல் உள்ளது.

இந்த எமோஜி அடுத்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் மெஸ்சேன்ஜ்ரில் துடிக்கும் இதயம் போன்ற ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுவும் அதன் பயனர்களிடம் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here