வெங்கட் பிரபுவின் லாக் டவுன் ஸ்பெஷல் – வைரலாகும் சென்னை 28 படக்குழு வீடியோ..!

0

கடந்த 2007 ஆகஸ்ட் மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த  படம்  சென்னை – 600028,இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகமும் வெளிவந்தது. இதில் சிவா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

பாய்ஸ் ஆர் பேக்

கொரோனா ஊரடங்கு நிலையில் வெங்கட்பிரபுவின் சென்னை 28 கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.கொரோனாவை தடுக்கும் வழிமுறைகள் பற்றி பிரபல நடிகர்களும் சின்னத்திரை நடிகர்களை மற்றும் பிரபலங்கள்  பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு கூறும் படம் போல் இயக்கி வெளியிட்டுள்ளார். தனது வீட்டில் இருந்தே சென்னை 600028 படத்தின் நடித்தவர்களை வைத்து அவர்களை வீட்டில் இருந்தபடியே நடிக்கவைத்து அந்த வீடியோவை தயாரித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு லாக்டவுன்

கையை சோப்பு போட்டு கழுவவேண்டும், சானிடைசர் பயன்படுத்தவேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கருத்துக்களை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here