ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி…, அர்செனல் அணியை வீழ்த்திய மான் சிட்டி!!

0
ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி..., அர்செனல் அணியை வீழ்த்திய மான் சிட்டி!!
ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி..., அர்செனல் அணியை வீழ்த்திய மான் சிட்டி!!

FA CUP தொடரின் 4வது சுற்றில் பிரபலமான மான் சிட்டி அணியானது அர்செனல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது.

FA CUP:

பிரீமியர் லீக்கின் ஒரு பகுதியான FA கப் தொடரின் 3 வது சுற்றுகள் அனைத்தும் கடந்த 25ம் தேதியுடன் முடிந்த நிலையில், இன்று 4 வது சுற்றுகள் தொடங்கப்பட்டன. இதில், அர்செனல் அணிக்கு எதிராக பிரபலமான மான் சிட்டி அணி மோதியது. இந்த போட்டியில், ஆரம்ப முதலே இரு அணிகளும் வேகமாக காட்ட தொடங்கின.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றியே முடித்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியின் 64 வது நிமிடத்தில், மான் சிட்டி அணியின் நாதன் ஏகே கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற வழி வகுத்தார். இதன் பிறகு, அர்செனல் அணி கோல் அடிக்க பல முறை முயற்சித்த போதும் மான் சிட்டி வீரர்கள் தடுத்து வந்தனர்.

இந்தியன் சூப்பர் லீக்: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய மும்பை சிட்டி…, முதலிடத்தை தக்க வைத்து அபாரம்!!

இதன் விளைவாக, ஆட்ட நேர முடிவில் மான் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கு முன், சவுதி சூப்பர் கப் தொடரின் அரையிறுதி போட்டியில், ரொனால்டோவின் அல்-நாசர் அணி அல்-இத்திஹாத் அணியிடம் தோல்வியை தழுவியது, டிரெண்டிங் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here