மதுரையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்., முன்னேற்றம் அடைந்து வருவதாக தகவல்!!!

0
மதுரையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்., முன்னேற்றம் அடைந்து வருவதாக தகவல்!!!
மதுரையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்., முன்னேற்றம் அடைந்து வருவதாக தகவல்!!!

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் வாகன ஓட்டங்கள் அதிகரித்து வருவதால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மதுரை மாநகரில் அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், கல்லூரி என அனைத்தும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாக கோரிப்பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் அலுவலக நேரங்களில் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர காலங்களில் பெரும்பாலனோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த பகுதிகளில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றத்தை காவல்துறை அண்மையில் மேற்கொண்டது. அதன்படி கோரிப்பாளையத்தில் இருந்து அண்ணா பஸ்ஸ்டாண்ட், ஆவின் நகர், கே.கே.நகர், வழியாக மாட்டுத்தாவணி வரை செல்லக்கூடிய திருவள்ளுவர் சாலையை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

கட்சி சார்பில் பேனர்கள் வைக்க தடை.., மீறினால் இது தான் தண்டனை.., தொண்டர்களை எச்சரித்த DMK செயலாளர்!!!

மேலும் மாட்டுத்தாவணியில் இருந்து கோரிப்பாளையம் செல்வதற்கு சினிப்ரியா தியேட்டர் அருகில் குருவிக்காரன் 2வது சாலையை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த போக்குவரத்து மாற்றத்தால் அண்மைக்காலமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த சோதனை முறை நிரந்தரமாக அமல்படுத்த வாய்ப்புள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here