ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி படைக்க உள்ள சாதனைகள்…, ஒரே தொடரில் அசத்தி படைப்பாரா??

0
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி படைக்க உள்ள சாதனைகள்..., ஒரே தொடரில் அசத்தி படைப்பாரா??
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி படைக்க உள்ள சாதனைகள்..., ஒரே தொடரில் அசத்தி படைப்பாரா??

இந்திய அணியின் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் படைக்க காத்திருக்கும் சாதனைகள் குறித்த முழு விவரத்தையும் இப்பதிவில் காணலாம்.

விராட் கோலி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதங்களை விளாசிய விராட் கோலி, தனது நிலையான பார்மை வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டியிலும் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச அளவில் 75 சதங்களை பூர்த்தி செய்து உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், சச்சினின் நூறாவது சதத்தை விரைவில் எட்ட கூடிய ஒரே வீரராக விராட் கோலி இருப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சச்சின் சதத்திற்க்கான சாதனை ஒன்றை சமன் செய்ய விராட் கோலிக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதாவது, சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் 9 சதங்களை அடித்துள்ளார். இதுவரை 8 சதங்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ள விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சின் சாதனை சமன் செய்து விடலாம்.

சச்சின் சாதனையை சமன் செய்ய இருக்கும் ரோஹித்…, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிகழ்த்துவாரா??

இதனை தொடர்ந்து, சர்வதேச அளவில் 271 ஒரு நாள் போட்டிகளில் விராட் கோஹ்லி 12809 ரன்களை குவித்துள்ளார். இவர் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், குறைந்த இன்னிங்ஸ்களில் 13000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை அடைவார். சச்சின் 321 இன்னிங்ஸ்களில் 13,000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 3 ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் ஆவது மேன் ஆப் தி மேட்ச் விருதை வென்றால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 10 முறை இந்த விருதை வென்ற உச்சத்தை பெறுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here