
திமுக நிகழ்ச்சிகளில் கட்சியினர் யாரும் கட் அவுட், பேனர்கள் வைக்க கூடாது என திமுக அமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
RS.பாரதி
தமிழகத்தில் பல்வேறு பொது நிகழ்ச்சிகள், விசேஷங்கள், திருவிழாக்கள், கட்சி கூட்டங்கள் போன்றவற்றிற்கு கட் அவுட், பேனர்கள் வைப்பதை சிலர் வழக்கமாக வைத்து வருகின்றனர். இப்படி பேனர்கள் வைப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் RS.பாரதி கட்சி தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது திமுக சார்பில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு கட்சி சார்பில் பேனர்கள் வைக்க கூடாது. அதை மீறி வைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி தொண்டர்களை எச்சரித்துள்ளார்.