முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிற்கு கொரோனா – முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அச்சம்!!

0

தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் உள்ள கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 7ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முதல்வர் வேட்பாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதால் கட்சி நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இதுவரை 6,61,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 10,314 பேர் உயிரிழந்து உள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்தாலும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ள அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை கொரோனா தொற்றிற்கு உள்ளாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தடுப்பு செயல்பாடுகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

தமிழகத்தில் வருகின்ற 2021 மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வருக்கு அருகில் நின்றிருந்த 54 வயதான முன்னாள் அமைச்சர் எஸ் கோகுல இந்திரா அவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் காலமானார் – கண்ணீர் மல்க அஞ்சலி!!

அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் தென்படவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சில நாட்களுக்கு முன்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காரணத்தால் தொண்டர்கள் அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here