ஐரோப்பா லீக்: ரொனால்டோவின் அசத்தல் கோல்…, 2வது இடத்தை உறுதிப்படுத்திய மான்செஸ்டர் யுனைடெட்!!

0
ஐரோப்பா லீக்: ரொனால்டோவின் அசத்தல் கோல்..., 2வது இடத்தை உறுதிப்படுத்திய மான்செஸ்டர் யுனைடெட்!!
ஐரோப்பா லீக்: ரொனால்டோவின் அசத்தல் கோல்..., 2வது இடத்தை உறுதிப்படுத்திய மான்செஸ்டர் யுனைடெட்!!

ஐரோப்பா கால்பந்து லீக் தொடரில் ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஷெரீப் அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது.

ஐரோப்பா கால்பந்து லீக்:

ஐரோப்பா கால்பந்து லீக் தொடரில் குரூப் E யில் இடம்பெற்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி ஷெரீப் அணியை எதிர்த்து போட்டியிட்டது. செல்சியா அணிக்கு எதிராக, யுனைடெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த போட்டியில் களமிறங்கி இருந்தார். இதையடுத்து தொடங்கிய இந்த போட்டியில், முதல் 40 நிமிடங்கள் வரையிலும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடியும் நேரத்தில் யுனைடெட் அணியின் டியோகோ டலோட் கோல் ஒன்றை அடித்திருந்தார். இதனால் யுனைடெட் அணி இடைவேளைக்கு முன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து, 2வது பாதியில் முழுவதுமாக யுனைடெட் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

தொடர் தோல்வியை சந்திக்கும் பாகிஸ்தான்…, அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்குமா??

இதில், 65 வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் மற்றும் 81 வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கோல் அடித்து அசத்தினர். இதனால், யுனைடெட் அணி இந்த போட்டியின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, யுனைடெட் அணி 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வி என 12 புள்ளிகளுடன் குரூப் E யில், 2வது இடத்தை தக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here