தர்ஷினியை காப்பாற்றும் ஜீவானந்தம்.., வசமாக சிக்கிய கடத்தல் கும்பல்.., அம்பலமான குணசேகரன் பித்தலாட்டம்!!!

0
தர்ஷினியை காப்பாற்றும் ஜீவானந்தம்.., வசமாக சிக்கிய கடத்தல் கும்பல்.., அம்பலமான குணசேகரன் பித்தலாட்டம்!!!
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி எல்லோரும் தர்ஷினியை தேடி எங்கெங்கோ அலைகின்றனர். இப்படி இருக்கையில் அவர்களும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் ஜீவானந்தம் வந்து காப்பாற்றுகிறார். பின் தர்ஷினி காணாம போன விஷயத்தைப் பற்றி அவரிடம் சொல்கின்றனர். அப்போது ஜீவானந்தமும் அவர்களுடன் சேர்ந்து தர்ஷினியை தேட ஆரம்பிக்கிறார். இப்படி இருக்கையில் தர்ஷினியை கடத்தி வைத்துள்ள அந்த ரவுடி ஜீவாநந்தத்திடம் ஒரு பேப்பரை காண்பித்து அதற்கு விளக்கம் கேட்கிறார். அந்த பேப்பரில் தான் தர்ஷினி தன்னை காப்பாற்றும்படி இங்கிலீஷில் எழுதிக் கொடுத்துள்ளார். இதன் மூலம் தான் தர்ஷினியை கண்டுபிடிப்பார்களாம்.
அதாவது தர்ஷினி எழுதிய உண்மையை அந்த ரவுடியிடம் சொல்லாமல் அவர்கள் வேறு ஏதோ சொல்லி சமாளித்து விடுவார்களாம். பின் ரவுடி அந்த பக்கம் சென்றதும் இவர்கள் தர்ஷினியை காப்பாற்ற செல்வார்களாம். அதன் பின்பு தான் அங்கு இருந்த ரவுடிகளை அடித்து விசாரிக்கையில் குணசேகர் தான் கடத்தி வைக்க சொன்னார். மேலும் நீங்கள் தர்ஷினி தொலைந்து போனால் தேர்தலுக்கான வேலைகளை செய்யமாட்டீர்கள். அதனால் தான் குணசேகரன் தர்ஷினியை கடத்த சொன்னார் என உண்மையை உடைத்து விடுவார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here