மோசமாகிவரும் காசா போர்., அத்துமீறும் இஸ்ரேல் ராணுவம்., இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு!!!

0
மோசமாகிவரும் காசா போர்., அத்துமீறும் இஸ்ரேல் ராணுவம்., இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு!!!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே எழுந்த போர் 3 மாதங்களைக் கடந்து பெரும் அழிவை சந்தித்துள்ளது. இதில்  பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.  நாளுக்கு நாள்  போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசா பகுதி மக்களுக்கு உண்ண உணவு மற்றும் நீரின்றி தவித்து வருகின்றனர்.
மேலும் போரை நிறுத்த WHO அமைப்பு பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் அவை பலனளிக்கவில்லை. அதோடு போரில்  காயமடைந்து உயிருக்கு போராடும் மக்களுக்கு மருத்துவ வசதிகளை கூட செய்ய விடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருவதாக பாலஸ்தீனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: அகவிலைப்படி, பழைய ஓய்வூதியம் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் அறிவிப்புகள்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here