ரேஷன் கார்டில் பிழை உள்ளதா.., கவலை வேண்டாம்.., ஆன்லைனிலே இனி சுலபமாக திருத்தம் செய்யலாம்!!!!

0
ரேஷன் கார்டில் பிழை உள்ளதா.., கவலை வேண்டாம்.., ஆன்லைனிலே இனி சுலபமாக திருத்தம் செய்யலாம்!!!!
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைகளை பெற ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் ரேஷன் கார்டில் பிழை இருந்தால் அதனை திருத்திக் கொள்ள ஒவ்வொரு மாதமும் முகாம்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இப்போது ரேஷன் கார்டில் உள்ள பிழைகளை ஆன்லைன் வழியாக எளிதில் திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

  • உணவு மற்றும் வழங்கல் துறையின் https://food.wb.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று ‘CITIZEN HOME’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன் பின் Rectify / Update அல்லது ‘Correct your Ration Card Information’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ரேஷன் கார்டு எண்ணை பதிவிடவும்.
  • பின் அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து Send OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • அந்த OTP பதிவிட்டு பெயர், வயது போன்றவற்றில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து update என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதன் பின் திருத்தப்பட்ட ரேஷன் கார்டை சில தினங்கள் கழித்து  e-DRC ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 Enewz Tamil டெலிக்ராம்

IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here