ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை!!

0

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், வாக்கு பதிவிற்கான இறுதி கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது.

இறுதிகட்டப் பணிகள்:

ஈரோடு கிழக்கு தொகுதியின், சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வே.ரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இதனால் இவர் இருந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இதற்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. தற்போது, இந்த இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என 77 வேட்பாளர்கள் இந்த களத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தொகுதியின் 52 இடங்களில் உள்ள 238 வாக்கு சாவடிகளிலும், வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக இறுதி கட்ட ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

‘துருவ நட்சத்திரம்’ இசையமைப்பில் ஹாரிஸ் ஜெயராஜ்….,அடுத்த மாஸ்டர் பீஸ் ஆன் தி வே….,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி என அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால், அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here