வாட்ஸ் அப்பில் மெசேஜ் பண்ண Bore அடிக்குதா? உங்களுக்காக வந்தாச்சு ChatGPT! மெட்டா கொடுத்த சர்ப்ரைஸ்!!

0

வாட்ஸ் அப்பில், வரும் மெசேஜ்களை ரிப்ளை செய்வதற்காக மெட்டாவுடன் ChatGPT கைகோர்க்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட்:

whatsapp தளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான புதுப்புது அப்டேட்கள் களமிறங்கி வருகிறது. சமீபத்தில், நாம் அனுப்பிய மெசேஜை 15 நிமிடத்திற்குள் எடிட் செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும் போது, அதற்கு ரிப்ளை செய்ய சோம்பேறித்தனம் படும் பயனர்களுக்காக, மெட்டா சூப்பர் சர்ப்ரைஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது, இதுபோன்ற தேவைகளுக்காக whatsapp உடன் ChatGPT கை கோர்க்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, நம்முடன் chat செய்வது மனிதனா? அல்லது எந்திரமா? என்று தெரியாத அளவுக்கு இந்த ChatGPT இயங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற, language library என்பதை பதிவிறக்கம் செய்து அதில் what’s app-get-main என்ற பக்கத்தை ஓபன் செய்ய வேண்டும். பின்பு அதில், server. py என்ற ஆவணத்தை இயக்கியதும் உங்களுக்கு ChatGPT ஓபன் ஆகி விடும்.

இதில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு, மனிதனைப் போலவே வாட்ஸ் அப்பில் chat செய்யும். இதனால், whatsapp ல் மெசேஜ் அனுப்ப சோம்பேறித்தனம் அடையும் பயனர்கள், இந்த அப்டேட்டை ஈசியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த அப்டேட்டை முறையாக அமல்படுத்துவது குறித்து, மெட்டா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here