கல்லூரி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது – தமிழக உயர்கல்வித்துறை கடிதம்!!

0
kp-anbalagan
kp-anbalagan

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘புதிய கல்விக்கொள்கையை’ வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழத்திற்கும் யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை சார்பில், மத்திய கல்வித்துறைக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டு உள்ளது. அதில் புதிய கல்விக்கொள்கையில் உள்ளது படி, பிற கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்து மாநிலங்களும் ஆய்வு செய்து வரும் நிலையில், தமிழக அரசு முதன்மை செயலர் உட்பட 7 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி உள்ளது. அக்குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இக்குழு ஆராய்ந்து தற்போது மத்திய கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் உள்ள முக்கிய அம்சமான பிற கல்லூரி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு கல்லூரி படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பரிந்துரை சரியானது இல்லை எனவும், புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளவும் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here