சுட சுட சப்பாத்திக்கு இந்த ”முட்டை கீமா” ரெசிபியை சமைத்து கொடுங்க., மிச்சமில்லாமல் சாப்பிடுவாங்க!!

0
சுட சுட சப்பாத்திக்கு இந்த ''முட்டை கீமா'' ரெசிபியை சமைத்து கொடுங்க., மிச்சமில்லாமல் சாப்பிடுவாங்க!!
சுட சுட சப்பாத்திக்கு இந்த ''முட்டை கீமா'' ரெசிபியை சமைத்து கொடுங்க., மிச்சமில்லாமல் சாப்பிடுவாங்க!!

பொதுவாக பலர் தங்களின் வீடுகளில் சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட உருளை கிழங்கு, பட்டாணி போட்ட குருமா ரெசிபியை தான் அடிக்கடி சமைத்து வருகிறார்கள். ஆனால் தற்போது தரமான சுவையில் சுலபமாக செய்யக்கூடிய முட்டை கீமா ரெசிபியை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்

  • முட்டை – 5
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்

இந்த முட்டை கீமா ரெசிபி தயாரிப்பதற்கு 5 முட்டைகளை உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் கேரட்டை துருவி எடுப்பது போல முட்டைகளை துருவி எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாயை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாயை அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மேலும் சிறிதாக நறுக்கிய இரண்டு தக்காளியை அதில் சேர்த்துக் கொள்ளவும். இதோடு கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிக்பாஸ் 7ல் டபுள் மடங்காக சம்பளத்தை கூட்டிய உலகநாயகன்.., யாத்தே.., இத்தனை கோடியா? பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!

பின்னர் அதில் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிண்டி விடவும். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து சீவி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு ஒரு பத்து நிமிடத்திற்கு கடாயை மூடி போட்டு மூடவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து முட்டை கீமாவை நன்றாக கிண்டி விடவும். இப்போது நமக்கு சுட சுட சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட முட்டை கீமா ரெசிபி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here