முட்டை ஆம்லெட் சாப்பிட்டு அலுத்து போச்சா?? அப்போ கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க!!

0

குழந்தைகளுக்கு தற்போது அதிக சத்துக்களை கொடுக்க கூடிய உணவுகளில் முட்டையும் ஒன்று. நாள் தோறும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் முட்டையை தவிர்க்க தான் செய்கின்றனர். இப்பொழுது அனைவரும் விரும்பி சாப்பிடும் விதமாக முட்டை கட்லெட் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 2

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சைமிளகாய் – 1

இஞ்சிபூண்டு விழுது – சிறிது

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் முட்டையை உடைத்து ஒரு சின்ன கிண்ணத்தில் ஊற்றி அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த முட்டை கலவையை இட்லி வேகவைப்பது போல நீராவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது அந்த முட்டை ஒரு கெட்டியான பதத்திற்கு வரும் அதனை சதுரமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் இஞ்சிபூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். பச்சை வாடை போனதும் அதில் சதுரமாக நறுக்கி வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான முட்டை கட்லெட் மசாலா தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here