Friday, April 26, 2024

குறைக்கப்பட்ட பள்ளி பாடங்கள்!! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!!

Must Read

கர்நாடக பாடநூல் நிறுவனம், பள்ளி பாட புத்தகத்தில் உள்ள பாடங்களின் அளவை 35 சதவீதமாக குறைத்துள்ளது.

பள்ளி பாடங்கள் குறைப்பு

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு அக்டோபரில் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பள்ளிகள் செயல்படும் நாட்களை 210-ல் 120 ஆக குறைத்துள்ளது.

இதையும் படியுங்க ⇒⇒ அண்ணா சிலைக்கும் காவிக் கொடி!! என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்!!

எனவே கர்நாடக பாடநூல் நிறுவனம், பள்ளி பாட புத்தகத்தில் உள்ள பாடங்களின் அளவை 35 சதவீதமாக குறைத்துள்ளது.

இயேசு கிறிஸ்து, முகமது நபிகள்

குறிப்பிட்ட பாடங்கள் மட்டும் ஏன் குறைக்கப்பட்டது என்பது தான் இப்போது பிரச்சினை. 6-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இயேசு கிறிஸ்து, முகமது நபிகள் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

திப்பு சுல்தான்

இதேபோல 7-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே வேளையில் 6-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் திப்பு சுல்தான் குறித்த பாடங்கள் நீக்கப்படவில்லை.

பலரும் எதிர்ப்பு

இந்நிலையல் இந்த பாட நீக்கத்துக்கு இஸ்லாமியர், கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

மஜத-வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது, “கடந்த ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் அரசு சார்பில் கொண்டாடப்படும் திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்தது.

இந்த ஆண்டு பாட நூலில் இருந்து திப்பு சுல்தான் பாடத்தை நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிரான போர் புரிந்தவர் என்ற முறையில் அவரை மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது” என்றார்.

 

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -