தமிழக ரேஷன் கடைகளில் கூடுதலாக 5 கிலோ அரிசி – அமைச்சர் அறிவிப்பு!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!

தமிழகத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.

ரேஷனில் கூடுதல் அரிசி:

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து ஜூலை மாதம் வரை ரேஷன் கடைகளில் சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாத ரேஷன் பொருட்களுக்கு வரும் ஆகஸ்ட் 1,2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை இலவசமாக பொருட்கள் வழங்கப்படாது எனவும் மக்கள் வழக்கம் போல் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Minister Kamaraj
Minister Kamaraj

ஒரு லிட்டர் டீசல் விலை 8 ரூபாய் குறைப்பு – மாநில முதல்வர் அதிரடி!!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை குறித்த கேள்விக்கு விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் அனுமதி அளிக்காது என கூறினார். மேலும் தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் 20 கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ சேர்த்து நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here