Saturday, May 18, 2024

அரசு பள்ளியில் படித்து டாக்டர் சீட் பெற்ற மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Must Read

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டில் இடம்பெரும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை செலுத்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்டமுடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனே கட்டணம் செலுத்த வேண்டும் என்று வறுபுறுத்தக் கூடாது என மருத்துவக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் வந்த பொழுது மருத்துவ கல்லூரியில் இடம்கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பது பெரும் வேதனை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்களுக்கு கல்வி கட்டணத்தில் உதவி பெற அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கேள்விக்கு விடை தரும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அறிவித்த 3 மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7.5% அரசு ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணத்தை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -