Saturday, May 18, 2024

இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம் – பொதுப்போக்குவரத்து தொடக்கம்!!

Must Read

நிவர் புயல் காரணத்தினால், முன்னெச்சரிக்கையுடன் கடந்த 24 ஆம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நேற்று இரவு நிவர் புயல் கரையை கடந்ததும் இன்று மதியம் 12 மணி அளவில் அனைத்து போக்குவரத்துக்கு சேவைகளும் தொடங்கி உள்ளதால் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

இயல்பு நிலையில் தமிழகம்:

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வலுப்பெற்று புயலாக மாறியது. புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி, மதியம் 1 மணி அளவில் அரசு பேருந்துகள் இயங்காது என்று கடலோர பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களுக்கு அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை நேற்று இரவு 8 மணியில் இருந்து நிறுத்தப்பட்டது. மேலும் நேற்று இரவு 7 மணி முதல் சென்னை விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

வங்கக்கடலில் உருவான தீவிர நிவர் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே, நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை மிகப்பெரிய உயிர் சேதாரம் இன்றி கரையை கடந்து முடிந்தது. புயல் கரையை கடந்ததை அடுத்து, தடை செய்யபட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று மதியம் 12 மணி அளவில் வழக்கம் போல தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -