அடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா?? சூப்பரான ஹேர் ஆயில்!!

0
hair growth
hair growth

கூந்தல் உதிர்வு பிரச்னையை சரிசெய்ய இந்த ஒரு எண்ணையை பயன்படுத்தினாலே போதும் முடி சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகிவிடும். கூந்தல் உதிர்வதற்கு காரணம் நாம் சரியாக எண்ணையை தலைக்கு தேய்க்காமல் இருப்பது தான். எண்ணெய் தேய்த்தால் முகத்தில் எண்ணெய் வழியும் என்பதற்காக வேலைக்கு செல்பவர்கள் உட்பட பலபேர் தலைக்கு எண்ணையே தேய்ப்பது இல்லை. இவை நாளடைவில் கூந்தலை பாதித்து பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

வைட்டமின் “E”:

வைட்டமின் E நமது உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்களில் ஓன்று. வைட்டமின் “E” மாத்திரையை நீங்கள் பயன்படுத்தும் எந்த ஹேர் ஆயில்களிலும் கலந்து பயன்படுத்தலாம். முடியில் உள்ள செல்களை புதுப்பிக்கவும், இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர்ச்சியடைய செய்யவும் பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெய்:

பொதுவாக நாம் தலைக்கு பயன்படுத்தும் சிறந்த எண்ணெய்களில் ஒன்று தேங்காய் எண்ணெய். முடி கொட்டுதல், இளநரை, வழுக்கை, அரிப்பு போன்ற பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் தேங்காய் எண்ணெய் சரிசெய்துவிடும். தேங்காய் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடிவளர்ச்சியை தூண்டுவதற்கு பயன்படுகிறது.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் எண்ணையில் ஆன்டி-ஆக்சிடன்டுகள் இருப்பதால் முடி உதிர்வதை தடுக்கிறது. ஆலிவ் எண்ணையுடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பதால் பொடுகு தொல்லை வராது. குளிர்காலத்தில் முடிகளில் வெடிப்பு, வறட்சி ஏற்பட்டால் ஆலிவ் எண்ணையை சூடுபடுத்தி தேய்த்து வந்தால் ஈரத்தன்மையோடு முடியை வைத்திருக்க உதவுகிறது.

பாதாம் ஆயில்:

பாதாம் ஆயில் நம் முடிக்கு தேவையான போஷாக்கை கொடுக்கிறது. பாதாம் எண்ணெய் தேய்ப்பதால் முடி பட்டுப்போல் அழகாக இருக்கும். வெளியே செல்லும்போது எண்ணெய் தேய்க்க விருப்பம் இல்லாதவர்கள் கொஞ்சமாக பாதாம் ஆயிலை எடுத்து முடிக்கு தேய்த்தால் எண்ணெய் பசை இருக்காது. கூந்தலும் பாதுகாப்பாக இருக்கும்.

முடி உதிர்வை கட்டுப்படுத்த:

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று எண்ணெய்களையும் சமஅளவு எடுத்து கொள்ளவும். வைட்டமின் “E” மாத்திரை மட்டும் 50மி.லி எண்ணைக்கு ஒரு மாத்திரை வீதம் எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொத்திக்க வைத்து அதனுள் இந்த எண்ணையை வைத்து சூடுபடுத்தவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த எண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வேலைக்கு செல்பவர்கள் வாரம் ஒருமுறை மிதமான சூட்டில் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்து குளித்து வந்தால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் மன அழுத்தம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here