ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் எபோலா நோய்த்தொற்று – பதற்றத்தில் மக்கள்!!

0

ஆப்பிரிக்கா நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று தாக்கம் இன்னும் குறையாத பட்சத்தில் தற்போது எபோலா வைரஸ் மக்களை மீண்டுமாக தாக்கியுள்ளது. இதை சமாளிக்க முடியாமல் ஆப்பிரிக்க அரசாங்கம் ஸ்தம்பித்துள்ளது.

எபோலா நோய்த்தொற்று

ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை எபோலா என்கிற உயிர்கொல்லி நோய்த்தொற்று அங்குள்ள மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த எபோலா வைரஸ் ஆப்பிரிக்க நாடான கினியா, லைபீரியா, சியாரா, லியோனின் ஆகிய நாடுகளை தாக்கியது. இந்த உயிர்கொல்லி நோய் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த 11,300 பேரை வாரிக்கொண்டு போனது. தடுப்பூசி மூலமாக கட்டுப்படுத்தப்பட்ட எபோலா வைரஸ் தற்போது மீண்டுமாக பரவ துவங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆப்பிரிக்க நாடான கினியாவில் 4 பேர் மர்மமான முறையில் இருந்துள்ளதையடுத்து, இறந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு எபோலா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பலியானவர்களின் குடும்பத்தில் உள்ள மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாவது, ‘எபோலா தொற்று பரவியிருப்பதை கண்டு அச்சத்தில் இருக்கிறோம். கொரோனா நோய்த்தொற்றினால் ஆப்பிரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எபோலா தொற்று நிலைமையை மோசமாகியுள்ளது’ என கூறினார்கள்.

பிரதமருக்கு எதிரான ட்வீட் – நடிகை ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்!!

கடந்த வாரம் காங்கோ நகரில் எபோலா தொற்று பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது கினியாவில் எபோலா தொற்று பரவியுள்ளது அங்குள்ள மக்களை அச்சத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here