‘பாரதி வீட்டிற்கு செல்லும் கண்ணம்மா, ஷாக்கில் சௌந்தர்யா’ – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

தற்போது “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு எட்டு வருடங்களுக்கு பிறகு நுழைகிறார். எதிர்பாராத பல திருப்பங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைந்து விடமாட்டார்களா என்று ரசிகர்கள் ஏங்கி போய் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் “பாரதி கண்ணம்மா” சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் தற்போது பல சுவாரஸ்ய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றது. முதலாவதாக, பாரதி கண்ணம்மாவிற்கு வைத்தியம் பார்க்கிறார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. கடைசியாக கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்ததற்கு பிறகு இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் எபோலா நோய்த்தொற்று – பதற்றத்தில் மக்கள்!!

இதனை அடுத்து இந்த சீரியலில் பல திருப்பங்கள் வருகிறது. தற்போது ஒரு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கண்ணம்மா ஹேமாவை பார்க்க வீட்டிற்கு செல்கிறார். ஆட்டோக்காரர் செல்லும் வீட்டினை பார்த்து அதிர்ந்து போய் விடுகிறார். காரணம், அது பாரதியின் வீடு. கண்ணம்மா திரும்பி செல்ல நினைக்கிறார். ஆனால், அதற்குள் ஹேமா வந்து கண்ணம்மாவினை விடாப்பிடியாக வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

செய்வதறியாது கண்ணம்மாவும் வீட்டிற்குள் சென்று விடுகிறார். கண்ணம்மாவை பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது. இப்போதுவது கண்ணம்மாவை பற்றிய உண்மையினை அறிந்து கொண்டு அவர் அந்த வீட்டில் பாரதியுடன் வாழ்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here