நடிகர் விமலுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கிய கெளரவம்!

0
நடிகர் விமலுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் - அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கிய புதிய கெளரவம்!

நடிகர் விமலுக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

கௌரவ டாக்டர் பட்டம்:

சிறு சிறு வேடங்களில் நடித்து கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விமல். இயக்குனர் பாண்டிராஜ் எடுத்த படமாகிய பசங்க படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். இவர் நடித்த களவாணி படம் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக கலகலப்பு, வாகை சூடவா,தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்தார்.

இந்நிலையில் நடிகர் விமலுக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இது குறித்து அப்பல்கலைக்கழகம் தெரிவித்தாவது, ‘நடிகர் விமல் சமர்ப்பித்து உள்ள சாதனைகள் மற்றும் பங்களிப்பை ஆராய்ந்தோம். அதன் அடிப்படையில் எங்கள் கல்வி ஆலோசனை குழு விமலுக்கு டாக்டர் ஆப் ஆர்ட்ஸ் என்ற பட்டத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமல் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து இந்த தகவலை வைரலாக்கி கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here