தே.மு.தி.க. விஜயகாந்த் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் முன்னணி நடிகராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். வழக்கமான பரிசோதனை என எதிர்பார்த்த நிலையில், நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாகவும், 14 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும் என பலரும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு உடல் நலம் தேறி உள்ளதாக மருத்துவர்கள் கூறி வந்ததை தொடர்ந்து, இன்று (டிசம்பர் 8) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இந்த அறிவிப்பு தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மீண்டும் உச்சம் கண்ட பெட்ரோல் விலை., அதிர்ச்சியில்  சென்னை வாசிகள்., விலை விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here