தீபாவளி அன்று இதையெல்லாம் செய்யக் கூடாது..,,மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!!

0
தீபாவளி அன்று இதையெல்லாம் செய்யக் கூடாது..,,மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!!
தீபாவளி அன்று இதையெல்லாம் செய்யக் கூடாது..,,மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!!

தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை:

தீபாவளித் திருநாள் வரும் 24ம் தேதி வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, இந்த ஆண்டும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், எந்த ஒரு விபத்தும் ஏற்படாத வண்ணம் தீபாவளியை கொண்டாடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கோரிக்கை விடுத்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

தீபாவளி பரிசு.,, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை ., ரோஸ்கர் மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர்!!

அதில் பொதுமக்கள் தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டியவை:

  • சுற்றுச்சூழலை பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளையும், குறைவான சத்தம் தரக்கூடிய பட்டாசுகளை மட்டும் தான் வெடிக்க வேண்டும். தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சர வெடிகளை தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
  • பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
  • பொதுமக்கள் பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டமாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here