தீபாவளி பரிசு.,, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை ., ரோஸ்கர் மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர்!!

0
தீபாவளி பரிசு.,, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை ., ரோஸ்கர் மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர்!!
தீபாவளி பரிசு.,, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை ., ரோஸ்கர் மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர்!!

நாடு முழுவதும் வேலையின்மை அதிகரித்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால் அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

10 லட்சம் பேருக்கு அரசு வேலை:

மத்திய அரசு, வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், ‘ரோஸ்கர் மேளா’ என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் கண்காட்சியை இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து இன்று சென்னையில், இந்த திட்டத்தின் கீழ் அரசுப் பணியில் இணைந்தவர்கள், அயனாவரத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றுள்ளனர். மேலும் சென்னை அயனாவரத்தில் 250 பேருக்கு பணி ஆணைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் அறிவிப்பு – 30 நாள் ஊதியத்தை வழங்க முடிவு! எவ்வளவு தெரியுமா?

இந்த திட்டத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள், மத்திய அரசின் 38 அமைச்சகங்கள்/ துறைகளில் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், எல்.டி.சி., ஸ்டெனோ, பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here