Home செய்திகள் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் அறிவிப்பு – 30 நாள் ஊதியத்தை வழங்க முடிவு! எவ்வளவு தெரியுமா?

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் அறிவிப்பு – 30 நாள் ஊதியத்தை வழங்க முடிவு! எவ்வளவு தெரியுமா?

0
அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் அறிவிப்பு – 30 நாள் ஊதியத்தை வழங்க முடிவு! எவ்வளவு தெரியுமா?
அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் அறிவிப்பு - 30 நாள் ஊதியத்தை வழங்க முடிவு! எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு, தற்காலிக போனஸ் வழங்கும் திட்டத்திற்கு செலவின துறை நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்காலிக போனஸ் :

தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், EPFO ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸாக ரூபாய் 14,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியங்களுக்கு சமமான, தற்காலிக போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மத்திய அரசின் உற்பத்தி திறன் இணைக்கப்பட்ட போனஸ் திட்டத்தின் கீழ் வராத ஊழியர்களுக்கு, இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின் குரூப் “சி” மற்றும் குரூப் “பி” ( அரசிதழ் அல்லாத) ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. இதற்கான கணக்கிட்டு உச்சவரம்பு, மாதம் ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி.,,விரைவில் மோசமான நிலை..எச்சரிக்கும் நிபுணர்கள் !!

இந்த போனஸ் மத்திய துணை ராணுவ படை மற்றும் ஆயுதப்படை பிரிவினருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் சராசரி ஊதியத்தை, கணக்கில் எடுத்துக் 30.4 ஆல் அதை வகுத்து, இந்த தற்காலிக போனஸ் வழங்கப்பட உள்ளது. இது, குறித்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here