Home செய்திகள் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி.,,விரைவில் மோசமான நிலை..எச்சரிக்கும் நிபுணர்கள் !!

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி.,,விரைவில் மோசமான நிலை..எச்சரிக்கும் நிபுணர்கள் !!

0
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி.,,விரைவில் மோசமான நிலை..எச்சரிக்கும் நிபுணர்கள் !!
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி.,,விரைவில் மோசமான நிலை..எச்சரிக்கும் நிபுணர்கள் !!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புப் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

தொடர் வீழ்ச்சி:

உலகில் கொரோனா வருகையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவே பல நாடுகள் முயற்சித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா–உக்ரைன் இடையில் போர் ஆரம்பித்தது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை, உணவு பொருட்களின் விலை அதிகரித்து உலக பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது. இதன் காரணமாக உலக நாடுகளில் பொருட்களின் விலை ஏற்றம் அடைந்து பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதையடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் காரணமாக அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து உள்ளதால், பல நாடு முதலீட்டாளர்களின் பார்வை டாலரின் பக்கம் திரும்பி உள்ளது. இதையடுத்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது கடந்த 20ம் தேதி அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 83.02 ஆக வீழ்ச்சியடைந்தது.மேலும் ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து ரூ.83.02 என்ற நிலையை எட்டியது.

தீபாவளியையொட்டி மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.,, வெளியான சூப்பர் அறிவிப்பு!!

இதையடுத்து நேற்றைய வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.12 ஆக சரிந்தது.இருப்பினும் வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு மீண்டும் ரூ.82.71 ஆக நிலைபெற்றது. இந்த நிலை தொடர்ந்தால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு விரைவில் ரூ.84 ஆக சரிய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here