சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வெங்கட் பிரபு மகள் ., அதுவும் இந்த விவாகரத்து நடிகருடனா??

0

கோலிவுட் திரையில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத் திறமையோடு ஜொலித்துக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘மங்காத்தா’ திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்ன தான் இவர் ஒரு இயக்குனராக இருந்தாலும் இவர் பாடகர் குடும்பத்தில் இருந்து வந்ததால் அவ்வப்போது இவருடைய படங்களில் பல பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் இவர் ‘கஸ்டடி’ என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இயக்கியுள்ளார். இதில் நாக சைதன்யா ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள்ள நிலையில், இதன் டப்பிங் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

மேலும் இப்படம் வரும் மே மாதம் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நேரத்தில் இப்படக்குழு இப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர். அதாவது இப்படத்தின் பாடல் ஒன்றை வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி எழுதி மற்றும் பாடியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இப்பாடல் வரும் 10 ஆம் தேதி இணையத்தில் ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here