தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு., அவதியுறும் வாகன ஓட்டிகள்!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கடந்த 300 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 9) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


அந்த வகையில் சென்னையில் வழக்கம் போல் பெட்ரோல் ரூ.102.63ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனை விலை ரூ.104.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் ரூ.103க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.95.05 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் டீசலின் விலையும் உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சிரமப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த விலை உயர்வு கூடுதலாக வேதனையை தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here