நடிகை அதிதிக்கு வந்த பிரச்சனை – களத்தில் இறங்கி அடித்த இயக்குனர் ஷங்கர்! மனுஷன் கொதிச்சுட்டாரே!!

0
இனி இங்க இருக்கறதுல பயன் இல்லை - தமிழ் சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்ட இயக்குனர் ஷங்கர்!!
நடிகை அதிதிக்கு வந்த பிரச்சனை - களத்தில் இறங்கி அடித்த இயக்குனர் ஷங்கர்! மனுஷன் கொதிச்சுட்டாரே!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மூத்த மகள், அதிதி சங்கருக்கு வந்த புது பிரச்சனையை தொடர்ந்து, அதிரடியாக களத்தில் இறங்கிய சங்கர் பிரச்சனையில் தலையிட்டு அதை முடித்து வைத்துள்ளார்.

முடித்து வைத்த சங்கர்:

நடிகர் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில், சங்கரின் மூத்த மகள் அதிதி நாயகியாக அறிமுகமானார். அண்மையில் வெளியான, இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த காமெடி நடிகர் கூல் சுரேஷ் அதிதியை கல்யாணம் பண்ணி தருமாறு சங்கரிடம் கோரிக்கை வைக்கிறேன் என பேட்டி அளித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும், இந்த திருமணம் நடக்கவில்லை எனில் முதல்வர் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்துவேன் என பேசினார். இந்த பிரச்சனை வைரல் ஆனதும், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அதிதி தனது  தங்கை எனவும் தெரிவித்தார். திடீரென, கூல் சுரேஷ் அந்தர்பல்டி அடித்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சங்கர் சுரேஷை அழைத்து, இவ்வாறு பேசியதற்காக வெளுத்து வாங்கியதாகவும், உடனே இதை வாபஸ் பெற வேண்டும் என எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் சட்டப்படி வரும் பிரச்சனையை, நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here