விவேக்கின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய ஷங்கர்..,இந்தியன் 2 படத்தில் தொடரும் விவேக் நடிப்பு!!

0
விவேக்கின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய ஷங்கர்..,இந்தியன் 2 படத்தில் தொடரும் விவேக் நடிப்பு!!
விவேக்கின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய ஷங்கர்..,இந்தியன் 2 படத்தில் தொடரும் விவேக் நடிப்பு!!

இந்திய சினிமா துறையில் நகைச்சுவை கலைஞர், பின்னணி பாடகர், சமூக ஆர்வலர் என பல திறமைகளோடு ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விவேக். இவர் தமிழ் திரையுலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடன் மட்டும் இணைந்து இதுவரை ஒரு படங்கள் கூட நடிக்க வில்லை என்பதை இவர் பல மேடைகளில் கூறிவந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்படத்தில் இவர் நடித்து முடிப்பதற்கு முன்பே மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த நேரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

பாதி dress தான் இருக்கு., மீதி எங்கமா ஜாக்லின்? ஒரே பதிவில் ஜாமான இணையதளம்!!

இதனால் விவேக் அவர்களின் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொருவரை நடிக்க வைக்க போவதாக இப்படக்குழு தகவல் கொடுத்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது. அதாவது விவேக் அவர்கள் நடித்த சீன்கள் நீக்கப் போவதாக எடுத்த முடிவை படக்குழு கைவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இதன் மூலம் கமலஹாசனுடன் ஒரே திரையில் வரவேண்டும் என்ற விவேக்கின் ஆசையை இயக்குனர் ஷங்கர் நிறைவேற்றி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here