Cutest picture of the day: மகள்களுடன் வெற்றியை கொண்டாடும் வீரர்கள்…, வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
Cutest picture of the day: மகள்களுடன் வெற்றியை கொண்டாடும் வீரர்கள்..., வைரலாகும் புகைப்படம் உள்ளே!!
Cutest picture of the day: மகள்களுடன் வெற்றியை கொண்டாடும் வீரர்கள்..., வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியை, நியூசிலாந்து வீரர்கள் தங்களது மகள்களுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து வீரர்கள்:

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதையடுத்து, நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் தொடரை இழக்க கூடாது என எண்ணி 2வது போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த 2வது போட்டியில், 257 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணி, 256 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஒரு ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், நியூசிலாந்தின் நீல் வாக்னர், ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்ய, வீரர்கள் மைதானத்திலேயே ஆர்ப்பரிக்க கொண்டாடினர்.

3 வெவ்வேறு சாதனைகளை படைக்க உள்ள இந்திய வீரர்கள்…, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் நிகழ்த்துவார்களா??

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த கேன் வில்லியம்சன் மற்றும் வெற்றியை உறுதி செய்த நீல் வாக்னர், இவர்கள் இருவரும் தங்களது மகள்களுடன் இணைந்து வெற்றியை கொண்டாடும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், கியூட்டஸ்ட் பிக் ஆஃப் தி டேவாக இந்த புகைப்படம் மாறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here