
ராஜமவுலி கடைசியாக இயக்கிய RRR திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர் அடுத்து இயக்க போகும் படத்தை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இயக்குனர் ராஜமவுலி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான RRR திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் மட்டுமின்றி இதற்கு முன் வெளியான பாகுபலி 2ம் ஆயிரம் கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வரலாற்று படங்களை எடுத்து அதனை எப்படி வியாபாரம் செய்வது என்று முதல் விதை போட்டவர் தான் ராஜமவுலி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஏன் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த மணிரத்னம் கூட பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என்று ராஜமவுலியை புகழாரம் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உலகநாயகன் செய்த செயலால் கதறி அழுத மனோபாலா – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
அதாவது அவர் பேசியதாவது, நான் மகாபாரதம் படத்தை எடுத்தால் என்னோட பாணியில் தான் எடுப்பேன். அதில் நீங்கள் படித்த மகாபாரதம் கதை அப்படியே இருக்கும். ஆனால் கதாபாத்திரங்கள் மாறுபடும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதுமட்டுமின்றி இந்த படத்தை 10 பாகங்களாக எடுக்க போகிறோம் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 10 பாகங்களா, அப்ப பட்ஜெட் எவ்வளவு கோடிய தாண்டுமோ தெரியலையே? என்று வாயை பிளந்து உள்ளனர்.