பாகுபலி பிரபாஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு.., வெளிநாட்டில் சிகிச்சை பெரும் பரிதாபம்!!

0
பாகுபலி பிரபாஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு.., வெளிநாட்டில் சிகிச்சை பெரும் பரிதாபம்!!
பாகுபலி பிரபாஸ்க்கு திடீர் உடல்நலக்குறைவு.., வெளிநாட்டில் சிகிச்சை பெரும் பரிதாபம்!!

பாகுபலி நடிகர் பிரபாஸ் உடல்நல குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் சலார் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ்

பிரம்மாண்ட இயக்குனரான ராஜமவுலி படைப்பில் வெளியான பாகுபலி 1 & 2 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ். தற்போது KGF படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றது. மேலும் KGF யை விட சலார் திரைப்படம் வசூலை அள்ளும் என்று தயாரிப்பாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது இருந்து படத்தோட எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறி வந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ ஷூட்டிங்கை சத்தமே இல்லாமல் முடித்த பிக் பாஸ் பிரபலம்.., அவரே வெளியிட்ட அறிவிப்பு!

அதாவது நடிகர் பிரபாஸ் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தாலும், அவர் சிகிச்சைக்காக வெளி வெளிநாட்டிற்கு சென்றுள்ள காரணத்தாலும் சலார் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு பிரபாஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here