ISL: பெனால்டி ஷாட்டில் வீழ்ந்த மும்பை சிட்டி…, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி!!

0
ISL: பெனால்டி ஷாட்டில் வீழ்ந்த மும்பை சிட்டி..., இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி!!
ISL: பெனால்டி ஷாட்டில் வீழ்ந்த மும்பை சிட்டி..., இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், மும்பை சிட்டி அணியை பெனால்டி ஷாட் மூலம் வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில், மும்பை சிட்டி அணியானது 2 முறை பெங்களூரு அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதன் முதல் போட்டியில், ஒரு கோல் வித்தியாசத்தில் வென்ற பெங்களூர் அணி, நேற்று நடைபெற்ற 2வது போட்டியிலும் வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என்ற முனைப்பில் விளையாடியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், இந்த 2வது போட்டியில், மும்பை சிட்டி அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இருப்பினும், முதல் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால், அதிக கோல் அடித்த அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இதனால், இரு அணிகளுக்கும் இடையே, பெனால்டி ஷாட் முறை கடைபிடிக்கப்பட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் இந்தியா…, வாய்ப்பை தவறவிட்ட இலங்கை!!

இதிலும் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டியே நிலவியது. இறுதியில், பெங்களூர் அணி 9-8 என்ற கோல் வித்தியாசத்தில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இன்று நடைபெற இருக்கும் மற்றொரு அரையிறுதியில், ஏடிகே மோகன் பகான் அணி ஹைதராபாத் அணியை எதிர்த்து மோத உள்ளது. இதில், வெற்றி பெறும் அணி, பெங்களூரு அணிக்கு எதிராக மார்ச் 18ம் தேதி இறுதிப் போட்டியில் மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here