ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்”.., மகளுக்காக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்!!

0
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்".., மகளுக்காக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்” படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

லால் சலாம்:

திரையுலகில் 3, வை ராஜா வை போன்ற வெற்றி படங்களை இயக்கி மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முதலில் அதர்வா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயரிட்டுள்ளனர். ஐஸ்வர்யா இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இதை தொடர்ந்து இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. அதுமட்டுமின்றி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்பொழுது வெளியாகும் தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்த போஸ்டரை பார்க்கும்போதே கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதையம்சம் போல தெரிகிறது. பேட், பந்து, ஹெல்மெட் அனைத்து கலவரத்தில் எறிவது போலவும் கட்டப்பட்டுள்ளது. எதோ கருத்துள்ள கதையம்சத்தை வைத்து தான் படம் தயாராகிறது என்று தெரிகிறது. மேலும் ரஜினி வேற சில காட்சிகளுக்கு வந்து செல்வதால் கண்டிப்பாக படம் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here