வாழ்த்து மழையில் நனையும் கிங் விராட் கோஹ்லி…, சொன்ன கதையும் சொல்ல மறந்த கதையும்!!

0
வாழ்த்து மழையில் நனையும் கிங் விராட் கோஹ்லி..., சொன்ன கதையும் சொல்ல மறந்த கதையும்!!

கிங் கோஹ்லி என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோஹ்லிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவரது சில சாதனைகளை பற்றி இப்பதிவில் காணலாம்.

விராட் கோஹ்லி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோஹ்லி இன்று தனது 34 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது பார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த இவர், ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் தனது அதிரடியான பேட்டிங்கால் விமர்சித்த அனைவரையும் வாயடைக்க செய்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும், தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உட்பட 220 ரன்களை குவித்ததுடன், ஒட்டுமொத்த டி20 உலக கோப்பைக்கான போட்டிகளில் 1065 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம், இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் தட்டிச் சென்றுள்ளார்.

ISL 2022: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்திய சென்னையின் FC!! அப்போ புள்ளி பட்டியலில் இடம் என்ன??

விராட் கோஹ்லி, கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளமான, ட்விட்டரில் 50 மில்லியனுக்கு மேல் பின் தொடர்பவர்களை கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். இதனை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 215 மில்லியனுக்கு மேல் பின் தொடர்பவர்களை கொண்டதன் மூலம், உலகில் இன்ஸ்டாகிராமில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 15 பட்டியலில் இணைந்த முதல் இந்தியர் ஆனார். இதனால், கிங் கோஹ்லி, சேஸிங் மாஸ்டர், ரன் மெஷின் உள்ளிட்ட பல செல்ல பெயர்களை வைத்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here