அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்பொழுது வெளியாகும் தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0
அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்பொழுது வெளியாகும் தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

துணிவு

இயக்குனர் எச்.வினோத் உருவாக்கத்தில் அஜித் நடித்து வந்த துணிவு படத்திற்கான ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது படத்திற்கான டப்பிங் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்கள் அனைவரது நடிப்பில் உருவான துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏற்கனவே இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் ஹிட் ஆனதால் இந்த படமும் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ட்விட்டரில் 50% ஊழியர் குறைப்பு நடவடிக்கை தொடக்கம்., பல இந்தியர்கள் பணி நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி!!

இந்நிலையில் துணிவு படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜிப்ரான் இசையில், வைசாக் எழுதிய “சில்லா சில்லா” என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில் இதன் பர்ஸ்ட் சிங்கள் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது அடுத்த வாரத்திற்குள் பர்ஸ்ட் சிங்கள் வெளியாக இருப்பதாக வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here