எனக்கும் சூர்யாவுக்கும் என்ன பிரச்சனை?? ஓபன் டாக் கொடுத்த ஹரி.. முழு விவரம் உள்ளே!!

0
எனக்கும் சூர்யாவுக்கும் என்ன பிரச்சனை?? ஓபன் டாக் கொடுத்த ஹரி.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் தான் ஹரி. இவர் தற்போது ரத்னம் படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் இவருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் தான் சிங்கம் 4 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்து ஹரி ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அதில், நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றிய அப்டேட்டை தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அந்தளவிற்கு சிங்கம் சீரிஸ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கும் சூர்யாவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாம் வதந்திகள் தான். மேலும் சிங்கம் 4 படம் பற்றி தற்போது வரை எந்த ஒரு முடிவையும் நான் எடுக்கவில்லை என கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களவை தேர்தல் எதிரொலி:  அரசு பணியாளர்களுக்கு இந்த விடுமுறை ரத்து? ம.பி. கலெக்டர் உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here