வர்மா திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் – கவலையில் தயாரிப்பாளர்!!

0
Varmaa_poster
Varmaa_poster

பிரபல தமிழ் இயக்குனரான பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படம் பல இழுபறிக்கு பின் இன்று வெளியானது. ஓடிடியில் வெளியான அடுத்த சில மணி நேரத்தில் இந்த திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வர்மா

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான படமே வர்மா. இது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து நல்ல வசூலை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் நடித்திருப்பார். இந்த படத்தில் மேகா சௌத்ரி, ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் போன்றோர் நடித்திருப்பர். இதற்கான டீசர் எல்லாம் வெளியாகி படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் இருந்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

varma
varma

கடைசி நேரத்தில் விக்ரம் மற்றும் பாலா இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. மேலும் தயாரிப்பாளர்கள் இந்த படம் பிடிக்கவில்லை என்றும் வேறு புது டீமை வைத்து படத்தை இயக்க போகிறோம் என்றும் அறிவித்தது.

Adithya Varma
Adithya Varma

இதனை அடுத்து தான் ஆதித்யா வர்மா திரைப்படம் உருவானது. ஆனால் நினைத்த அளவிற்கு இந்த ஆதித்யா வர்மா திரைப்படம் வெற்றியை தரவில்லை. படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து தற்போது பாலாவின் வர்மா திரைப்படம் Simply South என்ற ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியது.

Varma_Dhruv
Varma_Dhruv

இப்படத்தை காண 140 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ரீலீஸ் ஆன சில மணி நேரங்களில் இணையத்தில் வெளியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here