‘பர்ஹானா’ பட சர்ச்சை விவகாரம் .., ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு தீடிர் பாதுகாப்பு.., அதிரடி அறிக்கையை வெளியிட்ட அமீர்!!

0
'பர்ஹானா' பட சர்ச்சை விவகாரம் .., ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு தீடிர் பாதுகாப்பு.., அதிரடி அறிக்கையை வெளியிட்ட அமீர்!!
'பர்ஹானா' பட சர்ச்சை விவகாரம் .., ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு தீடிர் பாதுகாப்பு.., அதிரடி அறிக்கையை வெளியிட்ட அமீர்!!

தற்போதைய திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தனித்துவமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த பர்ஹான திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. முஸ்லிம் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் விதமாக படத்தை எடுத்துள்ளார்கள் என்று சில கடுமையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சில முஸ்லிம் நபர்களால் அவர்களுக்கு ஆபத்து நேரிட கூடாது என்பதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் தயாரிப்பு அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘பர்ஹானா’ படத்தை சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பதால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் அந்த படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது.

அதை விட முஸ்லிம் மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்ற நோக்கில் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள செய்தி உண்மையிலேயே எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் எனக்கு அந்த நடிகையை நன்றாக தெரியும். அவர் எந்த உள்நோக்கத்துடன் நடித்திருக்க மாட்டார். தி கேரள ஸ்டோரி படத்தையும் இந்த படத்தையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

என்னது.., CWC மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? அவரே வெளியிட்ட பதிவு!!

இரண்டு வேற வேற. தற்போது தமிழகம் மத வேற்றுமையை மறந்து ஒரு அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு, ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here